தீனியாத் நிறுவனம் பற்றி

தீனியாத் எஜுகேஷன் & சேரிடபிள் டிரஸ்ட் என்பது ஓர் தொண்டு நிறுவனம். இந்நிறுவனம் 2003 ஆண்டு முதல் குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஒளியில் இஸ்லாமிய அடிப்படைகளையும், மார்க்கக் கல்வியையும் போதிக்க முயற்சித்து வருகிறது.
இஸ்லாமிய போதனைகள் மூலம் மக்களை சிறந்த மக்களாக உருவாக்குவதும் மேலும் முழு மனித சமுதாயத்திற்கும் பயனளிப்பதே அவர்களின் நோக்கமாகும். இது அவர்களுக்கு இவ்வுலகிலும் மற்றும் மறுவுலகிலும் வெற்றியடைய உதவும். அல்லாஹ்வும் இஸ்லாமிய போதனைகளின் படி வாழ்வை அமைப்பதில் தான் வெற்றியை வைத்துள்ளான். இஸ்லாம் நமக்கு நம்பிக்கை பற்றியும் மேலும் வணக்கத்தையும் கற்றுத் தருகிறது. அது போலவே சரியான பகுத்தறிவு, தூய வாழ்க்கை, மற்றும் நல்ல பண்புகளையும் கற்றுத் தருகிறது. இதனால் ஒரு மனிதனுக்கு அவன் நற்பண்பு மற்றும் கற்பின் சிகரத்தை அடையவும் அவைகள் உதவுகிறது. எனவே ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவர்கள் தங்களின் பரப்பரப்பான நேரங்களிலிருந்து சிறிது நேரத்தை ஒதுக்கி இஸ்லாமிய போதனைகளை கற்று அவைகளை விளங்கிக் கொள்வது கட்டாயமாகும். இஸ்லாமிய போதனைகளை முஸ்லிம் சமுதாயத்தில் பரப்புவதற்குரிய சிறந்த வழி ஓர் முறைப்படுத்தப்பட்ட மக்தபை அமைப்பதாகும். எனவே அனைத்து இஸ்லாமிய அறிஞர்கள். மஸ்ஜித்களின் நிர்வாகிகள், மற்றும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இஸ்லாமிய நிறுவனங்களின் நலனில் அக்கறை கொண்ட மக்களும் தீனியாத் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து செயல்பட்டு இவ்வாறான முறைப்படுத்தப்பட்ட மக்தப்களை அமைப்பது அவசியமாகும். 15 வருட கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அனுபவத்திற்குப் பிறகு தீனியாத் நிறுவனம் கல்வி நிலையங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய ஓர் பாடத்திட்டத்தை வடிவமைத்து, அதற்கென அமைப்பையும் உருவாக்கி, அதை கற்பிக்கும் முறை மற்றும் அதனை முறையாக கண்கானிக்கும் முறையும் உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளது.
தீனியாத் நிறுவனம் மற்ற சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது, அவற்றில் முக்கியமானவை மருத்துவ உதவி, ஏழைகளுக்கு உணவளிப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது, ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் போன்றவை. இனம், மதம் மற்றும் சமுதாயங்களைக் கடந்து அனைத்து சமுதாய மக்களுக்கும் உதவுகிறது. அல்லாஹ் தஆலா இவையனைத்தையும் ஏற்றுக் கொண்டு இவ்வுலகிலும், மறுவுலகிலும் வெற்றிக்கு காரணமாக்குவானாக. ஆமீன்.


முறைப்படுத்தப்பட்ட மக்தப்

ஒரு மக்தபை முறைப்படுத்துவது ஏன் & எவ்வாறு ?


(தொழுகை மற்றும் ஜமாஅத் நேரம்)

அல்லாஹ் தஆலா கூறுகிறான் நிச்சயமாக தொழுகை என்பது முஸ்லிம்கள் மீது நேரம் குறிப்பிடப்பட்ட கடமையாக இருக்கிறது. மேலும் நபிகள் பெருமான் (ஸல்) அவர்கள் அல்லாஹ் தஆலா ஒரு முஸ்லிமிற்கு ஒரு நாளில் ஐந்து வேளை தொழுகைகளை கடமையாக ஆக்கியுள்ளான் என்று கூறியுள்ளார்கள்.
துல்லியாமான தொழுகை நேரங்களை அறிந்து கொள்ள மும்பை தீனியாத் நிறுவனம் " Salaah and Jamaat Time " என்ற பல முக்கிய அம்சங்களுடன், முழுமையான, நுணுக்கமான தொழில் நுட்பத்துடன் ஒரு செயலியை மேம்படுத்தியுள்ளது. இது பள்ளிவாசல்கள், மருத்துவமனைகள், அலுவலகங்களின் வரவேற்பறைகளில் பயன்படும்.

தீனியாத் பாடத்திட்டம்

தீனியாத் நிறுவனம் அனைத்து வயதுடைய குழந்தைகள், ஆண்கள், பெண்களுக்கான ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இப்பாடத்திட்டம் ஐந்து அடிப்படைத் தலைப்புகளை உள்ளடக்கியது.

The Specialities of this Syllabus

PRODUCTS

In order to make maktabs organized , Idaare Deeniyat, has not only provided a good syllabus, but also provided other amenities, such as wooden desks, uniforms, ID cards, black boards, bags etc.
Thus in this manner, Idaara-e-Deeniyat takes care of all the requirements of the student which can be acquired for the maktabs evolvement and betterment.SELF LEARNING


For the purpose of benefitting the Ummah some important topics, based on the Quran, Hadith, and other religious texts, have been given in the form of DAILY and WEEKLY LESSONS .Studying and memorising these topics will lead to a deeper understanding of our Deen. These topics should be read daily/weekly and one must also endeavour to invite others to read them.
Safar
1442
1
20
September
2020
DEEN SEEKHNA SIKHAANA
VIEW
QURAAN & HADEES
VIEW


SERVICESCONTACT US

Please fill in the details and we will get back to you shortlyTo subscribe fill in the details.
  • English
  • Tamil
  • Arabic
  • Urdu
WordPress Video Lightbox Plugin